LATEST NEWS
“வெறும் 2 சீட்டை வச்சுக்கிட்டு இவ்வளவு ஆட்டமா?” விமர்சிப்பவர்களுக்கு திருமாவளவன் கொடுத்த மரண மாஸ் பதிலடி.. தவெக கூட்டணியில் வெடித்தது மோதல்..!!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைவதற்கு விசிகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மிக முக்கியப் பலமாக இருந்ததுடன், அவர்கள் தற்போதைய அரசில் அமைச்சர் பதவிகளையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், “இரண்டு சீட்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு ஆட்டமா?” என்று கூட்டணிக்குள்ளும் வெளியிலும் பல தரப்பினர் தங்களை விமர்சித்து வருவதாகத் திருமாவளவன் பொது நிகழ்ச்சி ஒன்றில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். தங்களை விமர்சிப்பவர்களிடம் உள்ள காழ்ப்புணர்ச்சியே இதற்குக் காரணம் என்றும், ஆட்சி அமைப்பதற்கு அந்த இரண்டு இடங்களின் ஆதரவு அவசியமாகத் தேவைப்பட்டதால் தான் அதற்கு முக்கியத்துவம் கிடைத்தது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
விசிக அமைச்சர் பதவிகளைப் பெற்றுவிட்டதால் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்கள் உடனே விடுதலை பெற்றுவிடப் போவதில்லை என்றும், சாதிய வன்கொடுமைகள் உடனடியாக நின்றுவிடாது என்றும் திருமாவளவன் யதார்த்தத்தைப் பேசியுள்ளார். திமுக, அதிமுக அல்லது தற்போதைய தவெக என எந்த ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் இதுபோன்ற சமூகத் தீமைகள் தொடரத்தான் செய்கின்றன என்றும், அதற்கு ஆட்சியில் இருப்பவர்கள் மட்டுமே பொறுப்பல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக திமுக ஆட்சியில் இதே கருத்தைக் கூறியபோது தங்களை ‘திமுக செம்பு’ என்றும், ‘முட்டுக்கொடுக்கிறான் திருமா’ என்றும் விமர்சித்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
திருமாவளவன் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தபோதிலும் திமுகவுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வருவது தற்போதைய கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், காங்கிரஸ் மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் இவரை மறைமுகமாக விமர்சித்து வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு அணியில் சேர்ந்துவிட்டால் இன்னொரு அணியுடன் நட்பே வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் அது துரோகம் என்று பேசும் அரசியல் சூழல் நிலவுவதாக அவர் வருத்தப்பட்டுள்ளார். மேலும், விசிக என்பது எப்போதும் இடதுசாரி அரசியலைத் தீவிரமாக முன்னெடுக்கும் ஒரு சுதந்திரமான கட்சி என்பதையும் அவர் திட்டவட்டமாகப் பதிவு செய்துள்ளார்
