LATEST NEWS
BREAKING: நாதகவில் மேலும் ஒரு முக்கிய தலைவர் ராஜினாமா.. காலையிலேயே சீமானுக்கு காத்திருந்த பேரிடி..!!
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளரான வழக்கறிஞர் சங்கர், கட்சியில் தான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்துவிட்டு, கட்சியிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை அண்ணா நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மிக முக்கிய அங்கமாகச் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்காக நீதிமன்றங்களில் பல முக்கிய வழக்குகளைத் முன்னின்று நடத்தியவர் என்பதால் இவரது இந்த விலகல் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான முத்துப்பாண்டி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகிய நிலையில், தற்போது வழக்கறிஞர் சங்கரும் விலகியுள்ளார். கட்சியின் மூத்த மற்றும் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருவது, கட்சியின் உள்விவகாரங்களில் ஏதேனும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா என்ற விவாதத்தை அரசியல் அரங்கில் கிளப்பியுள்ளது.
