LATEST NEWS
“காப்பாத்துங்க.. காப்பாத்துங்க!.. முகம் கழுவ போன இடத்தில் நேர்ந்த விபரீதம்.. சிறுவனை அலேக்காக தூக்கி விழுங்கிய ராட்சத முதலை.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
விவசாய நிலத்தில் நெல் நாற்று நடும் பணியை முடித்த பிறகு, 12 வயதான சுனில் என்ற சிறுவன் தனது முகம் மற்றும் கைகளைக் கழுவுவதற்காக காக்ரா ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளான். அப்போது, ஆற்றில் பதுங்கியிருந்த முதலை ஒன்று திடீரென அவனைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த சிறுவன் அலறியுள்ளான். அவனது அலறல் சத்தத்தைக் கேட்டு, அருகில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த கிராம மக்கள் மற்றும் அவனது குடும்பத்தினர் ஓடி வந்து முதலையிடமிருந்து சிறுவனை மீட்கப் போராடியுள்ளனர்.
धान रोपाई के बाद घाघरा नदी पर हाथ-मुंह धोने गए 12 वर्षीय सुनील पर मगरमच्छ ने हमला कर दिया pic.twitter.com/vZMOvUkz3t— Anjali Kumari (@AnjaliKumari009) July 17, 2026
அவனைக் காப்பாற்ற அவனது மாமாவும் கிராம மக்களும் செங்கற்கள் மற்றும் கற்களை எறிந்து முயன்ற போதிலும், அந்த முதலை சிறுவனை விடவே இல்லை. இரண்டு மூன்று முறை அச்சிறுவனைத் தண்ணீரில் தூக்கி வீசிய முதலை, பின்னர் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது. கண் இமைக்கும் நேரத்திற்குள், அது அந்தச் சிறுவனை முழுமையாக விழுங்கியது. இந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 5 மணி நேரம் கழித்து கிராம மக்கள் சிறுவனின் உடலை மீட்டனர். மீட்கப்பட்ட அந்த உடலில் ஒரு காலும், வயிற்றின் ஒரு பகுதியும் இல்லாமல் இருந்தது காண்போரை உலுக்கியது. தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
