CINEMA
“அந்த நடிகை தான் வேணும்..! இயக்குநரின் தேர்வை நிராகரித்து கறார் காட்டிய தனுஷ்..! அந்த ஹீரோயின் யார் தெரியுமா ..?!”
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் தனது 56-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து முதலில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார். ஆனால், நடிகர் தனுஷ் இந்த நடிகைதான் வேண்டும் என்று இயக்குநருக்கு கறாரான ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் பிரபல நடிகை மமிதா பைஜு தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று தனுஷ் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
இயக்குநரின் தேர்வையும் மீறி மமிதா பைஜுவை ஒப்பந்தம் செய்யும்படி தனுஷ் வலியுறுத்தியதற்கு ஒரு முக்கியக் காரணம் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷுடன் இணைந்து ‘இடி அமித் அண்ணன் கலிபோர்னியா’ திரைப்படத்தில் மமிதா பைஜு நடித்திருந்ததால், அவரது நடிப்பு தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே தனுஷ் மமிதாவை மீண்டும் கமிட் செய்யச் சொல்லியுள்ளார். இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் படக்குழுவினரால் வெளியிடப்படவில்லை.
