LATEST NEWS
“தப்பு செஞ்சா உடனே தண்டனை” குண்டாஸ் வழக்கில் கைதான தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்… தலைமை அதிரடி..!!
குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட உறுப்பினர் எஸ். பரத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் மலர் விழி ஜெயபாலா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த அதிரடி நீக்கம் அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தவெக கட்சியை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஒரு முக்கிய நிர்வாகி, குற்றவியல் நடவடிக்கைகளுக்காகக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் அரசியல் மற்றும் கட்சி வட்டாரங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
