LATEST NEWS
“CM விஜய்க்கு என்ன பயம்..?” காவிரிப் பிரச்சினையில் கொந்தளித்த ஸ்டாலின்..!!
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை எதிர்த்துப் பேச முதலமைச்சர் விஜய்க்கு என்ன பயம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார். இந்த விவகாரம் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசாமல் மௌனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
