இரவோடு இரவாக EPS க்கு அதிர்ச்சி… ஜெயலலிதா பெயர் சூட்டிய ‘அந்த’ முக்கிய நிர்வாகி ராஜினாமா… அதிமுகவில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரவோடு இரவாக EPS க்கு அதிர்ச்சி… ஜெயலலிதா பெயர் சூட்டிய ‘அந்த’ முக்கிய நிர்வாகி ராஜினாமா… அதிமுகவில் பரபரப்பு..!!

Published

on

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகச் சிங்கை ராமச்சந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இது கோபத்திலோ, வருத்தத்திலோ அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேறாததாலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தன் மனசாட்சிக்கு நேர்மையாக இருக்கவே விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பொறுத்தவரை அதிமுக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, தன் குடும்பத்தின் ஒரு அங்கம் என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார். இதனால் இந்த அறிவிப்பை ஒரு சாதாரண அரசியல் கடிதமாகப் பார்க்காமல், தன் வாழ்க்கையைப் பின்நோக்கிப் பார்த்து எழுதிய மனப்பூர்வமான கடிதமாகவே கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மேலும் தனது குடும்பத்திற்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையிலான நெகிழ்ச்சியான பிணைப்பை நினைவுகூர்ந்துள்ள அவர், 1987-இல் தன் பெற்றோரின் திருமணத்தில் எம்.ஜி.ஆர். கலந்துகொண்டு வாழ்த்தியதையும், ஜெயலலிதா தனக்கு ‘ஜி. ராமச்சந்திரன்’ என்று பெயர் சூட்டியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சாதாரண மில் தொழிலாளியாக இருந்த தன் தந்தையைச் சட்டமன்ற உறுப்பினராக உயர்த்தியதும் ஜெயலலிதா தான் என்றும் அவர் தனது அறிக்கையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in