“அடப்பாவமே டீச்சரா இவர்..? 5 வயது பிஞ்சுக் குழந்தைக்குக் கத்தியால் சூடு… ஆசிரியை செய்த பகீர் செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவமே டீச்சரா இவர்..? 5 வயது பிஞ்சுக் குழந்தைக்குக் கத்தியால் சூடு… ஆசிரியை செய்த பகீர் செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் நர்சரி பள்ளியில், ஐந்து வயது சிறுவன் மீது ஆசிரியை நிகழ்த்திய கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் வகுப்பறையில் இருந்தபோது சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டுள்ளான். ஆனால், ஆசிரியை பிரீதி குஷ்வாஹா அனுமதி மறுத்ததால், கட்டுப்பாட்டை இழந்த சிறுவன் தனது சீருடையிலேயே சிறுநீர் கழித்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, கத்தியை நெருப்பில் சூடேற்றி, அச்சிறுவனின் பிறப்புறுப்பில் சுடு வைத்துத் தண்டித்துள்ளார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் கடுமையாக வலிப்பதாகக் கூறி அழுததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அவனைப் பரிசோதித்துப் பார்த்தபோதுதான் பிறப்புறுப்பில் காயம் ஏற்பட்டு கொப்புளம் எழும்பியிருப்பது தெரியவந்தது. இது குறித்து வழக்கறிஞரான சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பெற்றோர்களிடையே கடும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in