LATEST NEWS
” எங்க நாட்ட விட்டு போடி…! பொட்டு வைத்ததால் வந்த இனவெறி தாக்குதல்… பொங்கி எழுந்த இந்திய-அமெரிக்க பெண் டாக்டர்… நெற்றிப்பொட்டில் அடித்த பதிலடி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
அமெரிக்காவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் இந்திய-அமெரிக்க மருத்துவர் கரிஷ்மா ரெட்டி, தான் மருத்துவ மாணவியாக இருந்தபோது சந்தித்த ஒரு இனவெறி சம்பவத்தைக் காணொளியாகப் பகிர்ந்திருந்தார். ஜார்ஜியா மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில், கிராமப்புறப் பயிற்சியின்போது நோயாளி ஒருவர் அவரது நெற்றிப் பொட்டைக் குறிப்பிட்டு, “அவளுக்குத் திருமணமாகும்போது கணவன் அதைச் சுரண்டிப் பார்த்துத் தங்குமிடம் அல்லது பெட்ரோல் பங்க் கிடைத்ததா எனத் தெரிந்துகொள்வான்” என்று இழிவுபடுத்தியதாகக் கூறியிருந்தார். ஒரு வேடிக்கையான நினைவாகப் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு, இணையத்தில் ஏராளமானோர் “இந்தியாவுக்கே திரும்பிப் போ” என கடுமையான இனவெறிக் கருத்துகளைப் பதிவிட்டு வெறுப்பை உமிழ்ந்தனர்.
An Indian 🇮🇳 origin doctor living in the USA faced hatred and racism from whites simply because she wore a bindi.
At this point, Indians are being hated simply for existing. pic.twitter.com/c6d9OYr4uh— CAP ( CHAPPAL ALLIANCE PARTY ) (@ChappalAlliance) July 23, 2026
இந்த வெறுப்பலைக்கு பதிலளித்து இரண்டாவது காணொளியை வெளியிட்ட டாக்டர் கரிஷ்மா, “என் வாழ்நாளில் இவ்வளவு இந்திய எதிர்ப்புப் பேச்சுகளை நான் பார்த்ததே இல்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த போதிலும் தான் சந்தித்த இந்த அநியாயமான தாக்குதலுக்குப் பதிலளித்த அவர், இந்துக்கள் பசுவை ஏன் மதிக்கிறார்கள் என்ற உண்மையான காரணத்தையும் விளக்கினார். முற்காலத்தில் தாய்மார்கள் இறந்தபோது பசுவின் பாலே மனித குலத்திற்கு வாழ்வளித்ததால், அந்த மரியாதையின் காரணமாகவே பசுவைக் கொல்வதில்லை என்ற விளக்கத்தையும் அளித்தார். மேலும், இணையத்தில் மற்றவர்களைக் காயப்படுத்துவதில் மக்கள் இவ்வளவு சௌகரியமாக மாறியிருப்பது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், அனைவரும் அன்போடும் மரியாதையோடும் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
கரிஷ்மா ரெட்டியின் இந்த கண்ணியமான விளக்கத்திற்குச் சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பும் ஆதரவும் குவிந்து வருகின்றன. “கொடூரமான இனவெறியை எதிர்கொண்ட போதிலும், அமைதியாகவும் தலைசிறந்த தலைவரைப் போலவும் பதிலளித்துள்ளீர்கள்” என்றும், அவரது கருணை மற்றும் அன்பைப் பாராட்டியும் பல இணையவாசிகள் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் இணையத்தில் நிலவும் இனவெறிப் போக்கைப் பற்றியும், அதற்கு எதிரான கண்ணியமான எதிர்வினையைப் பற்றியும் உலக அளவில் பெரிய விவாதத்தை
