LATEST NEWS
குஷியோ குஷி..! “இனி கரண்ட் பில் குறைய வாய்ப்பு இருக்கு” மின்கட்டணக் கொள்ளை புகாரால் அதிர்ந்த அரசு… அதிகாரிகளுக்குப் பாய்ந்தது அதிரடி உத்தரவு..!!
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழக்கத்தை விட அதிகளவில் மின்கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, நுகர்வோரின் மின் கணக்கீட்டு முறைகள் மற்றும் மின்கட்டண உயர்வுக்கான காரணங்கள் குறித்து உடனடியாகக் கள ஆய்வு செய்து, வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே மாதக் கணக்கீட்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்குக் கூடுதலான கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது மின்வாரியத்தின் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இமாலயத் தவறுக்கான காரணத்தைக் கண்டறிந்து, மின் கட்டண கணக்கீட்டில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் அவற்றை உடனடியாகச் சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்தக் கடுமையான கள ஆய்விற்குப் பிறகும், அதிகாரிகள் சமர்ப்பிக்கவுள்ள இறுதி அறிக்கையின் அடிப்படையிலும், தவறுதலாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட வீடுகளுக்கான மின் கட்டணம் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக நுகர்வோர் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
