“கூடுதலா பணம் கட்டியிருந்தா கவலையே படாதீங்க” அடுத்த மாச பில்லுல கழிச்சுக்கலாம்.. தமிழக மின்சார வாரியத்தின் அதிரடி சலுகை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கூடுதலா பணம் கட்டியிருந்தா கவலையே படாதீங்க” அடுத்த மாச பில்லுல கழிச்சுக்கலாம்.. தமிழக மின்சார வாரியத்தின் அதிரடி சலுகை..!!

Published

on

தமிழகத்தில் பொதுமக்கள் ஏதேனும் காரணங்களால் கூடுதலாக மின்கட்டணம் செலுத்தியிருந்தால், அந்த உபரித் தொகை அவர்கள் அடுத்த முறை செலுத்தும் மின்கட்டணத்தில் முழுமையாகக் கழித்துக்கொள்ளப்படும் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நுகர்வோருக்கு நிம்மதியளிக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டை எவ்வித தவறும் இன்றி மிகவும் துல்லியமாகக் கணக்கீடு செய்ய வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

மின்கட்டண கணக்கீட்டு முறைகளில் பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் முழுமையாக உறுதி செய்யத் தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளும் தவெக அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கியுள்ளார். பொதுமக்கள் மின்கட்டணம் தொடர்பாக எழுப்பும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in