LATEST NEWS
ஐடி வேலையை விட… டீக்கடையில் செம பிசினஸ்..! மாத வருமானத்தைக் கேட்டா அசந்து போய்டுவீங்க..! முடிவைப் பார்த்து சிரிச்சவங்க முன்னாடி… கெத்தா நிற்கும் நபரின் வெற்றிப் பின்னணி..!!
கார்ப்பரேட் நிறுவனத்தில் மாதம் ரூ.38,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், தொழில் வளர்ச்சியின்மை மற்றும் அதிகரித்துவந்த குடும்பச் செலவுகள் காரணமாக மே மாதத்தில் தனது வேலையை ராஜினாமா செய்தார். நிலையான சம்பளம் தரும் பணியை விட்டு விலகியபோது, அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்வதாகவே சுற்றியிருந்தவர்கள் நினைத்தனர்.
தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், சுமார் ரூ.2 லட்சம் முதலீட்டில் ஓர் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் டீக்கடை ஒன்றைத் தொடங்கினார். கடையை நவீன முறையில் அமைத்து, டீ தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க இரண்டு பெண் ஊழியர்களையும் நியமித்தார். சாதாரண டீ ரூ.10 என்றும், சிறப்பு டீ ரூ.20 என்றும் எளிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கினார்.
ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கடை அமைந்ததால் நாளொன்றுக்குச் சராசரியாக 400 கப் டீ விற்பனையாகி, தினமும் ரூ.6,000 வரை வியாபாரம் நடைபெற்றது. கடை வாடகை, மின்சாரம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் மூலப்பொருட்களின் செலவுகள் போக, மாதம் ரூ.1 லட்சம் நிகர லாபமாக ஈட்டுகிறார். தற்போது வடை பாவ், சமோசா மற்றும் ஜிலேபி போன்ற நொறுக்குத் தீனிகளையும் சேர்த்து தனது தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளார்.
