என்னடா சொல்றீங்க…!” ரோட்டோரத்துல டிவி, சோஃபா கிடக்கு… தூக்கிட்டு போங்க!” – கனடாவில் நடக்கும் பேரதிசயம்… தீயாய் பரவும் தம்பதியின் விசித்திர ட்ரெண்ட் வீடியோ..!! – cinefeeds
Connect with us

National

என்னடா சொல்றீங்க…!” ரோட்டோரத்துல டிவி, சோஃபா கிடக்கு… தூக்கிட்டு போங்க!” – கனடாவில் நடக்கும் பேரதிசயம்… தீயாய் பரவும் தம்பதியின் விசித்திர ட்ரெண்ட் வீடியோ..!!

Published

on

கனடாவில் சாலையோரத்தில் கைவிடப்படும் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்களை, விருப்பமுள்ளவர்கள் இலவசமாகத் தங்களின் தேவைகளுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக ரூமன் மற்றும் தருண் என்ற இந்தியத் தம்பதியினர் வெளியிட்டுள்ள காணொளியில், தெருவோரத்தில் யாருடைய அனுமதியும் இன்றி இலவசமாக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் கிடந்த பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டி, சோபா, பாத்திரம் கழுவும் இயந்திரம் மற்றும் பார்பிக்யூ அடுப்பு போன்ற பொருட்களைக் காட்டி வியப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

https://www.instagram.com/reel/DbQZr4kxyQZ/?utm_source=ig_web_button_share_sheet

Advertisement

கனடாவின் இந்த விசித்திரமான மற்றும் பயனுள்ள பழக்கம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இக்காணொளியைப் பார்த்த பல இந்திய இணையவாசிகள், “இந்தியாவிலும் இது போன்ற இலவசமாகப் பொருட்களை எடுத்துச் செல்லும் முறை நடைமுறைக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் நகைச்சுவையாகவும், சிலர் அந்தப் பொருட்கள் இருக்கும் இடங்களைக் கொண்டும் தங்களது சந்தேகங்களைக் கேட்டு இக்காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in