CRIME
கன்னியாகுமரியில் அதிர்ச்சி..! சிவசேனா தலைவர் சரமாரி வெட்டி கொலை.. தாமிரபரணி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம்..!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றின் மேம்பாலத்தின் அடியில், கேரளா மாநில சிவசேனா கட்சியின் தலைவர் அதுல் (32) என்பவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுலின் உடலில் ஆங்காங்கே ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதால், அவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடலை மறைக்கும் நோக்கில் ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் பலத்த சந்தேகம் அடைந்துள்ளனர்.
இக்கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், அதுல் பயன்படுத்தி வந்த காரைக் கண்டறிந்து சோதனை செய்தபோது, அதன் உள்ளே ஆங்காங்கே ரத்தக்கறைகள் படிந்திருப்பது தெரியவந்தது. இதன் மூலம், இக்கொலை சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் திட்டமிட்டு ஈடுபட்டிருப்பது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய கொலையாளிகளை விரைந்து பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
