“அடப்பாவிகளா.. புனித நீரிலும் மோசடியா..?” கொதித்தெழுந்த பக்தர்கள் செஞ்ச காரியத்தை பாருங்க.. கடைக்காரர்களுக்கு கிடைத்த மரண மாஸ் பாடம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடப்பாவிகளா.. புனித நீரிலும் மோசடியா..?” கொதித்தெழுந்த பக்தர்கள் செஞ்ச காரியத்தை பாருங்க.. கடைக்காரர்களுக்கு கிடைத்த மரண மாஸ் பாடம்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கன்வாட் யாத்திரையின் போது, கன்வாரியர்களுக்கும் உள்ளூர் கடைக்காரருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்காதேவியின் புனித நீரை அடைத்து விற்கும் பாத்திரங்களில் அளவைக் குறைத்து வியாபாரி ஏமாற்றுவதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டினர். குறிப்பாக, 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் 4.5 லிட்டர் நீரும், 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் வெறும் 7.5 லிட்டர் புனித நீரும் மட்டுமே நிரப்பி விற்பனை செய்யப்பட்டது கன்வாரியர்களால் கண்டறியப்பட்டது.

कांवड़ यात्रा –
5L के कलश में 4.5L और 10L के कलश में सिर्फ 7.5L गंगाजल आ रहा है। कांवड़ियों ने दुकानदार से इसकी शिकायत की तो विवाद बढ़ गया।
📍हरिद्वार, उत्तराखंड pic.twitter.com/WyywC46dkD— Sachin Gupta (@Sachingupta) August 7, 2026

இந்த அளவு குறைபாடு மற்றும் ஏமாற்று வேலை குறித்து கன்வாரியர்கள் கடைக்காரரிடம் நேரடியாகத் தட்டிக் கேட்டபோது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றிப் பெரிய தகராறாக மாறியது. நீண்ட தூரம் பயணம் செய்து புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களிடம் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது அவர்களின் புனித உணர்வுகளைக் காயப்படுத்துவதாகக் கூறி பக்தர்கள் கொந்தளித்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in