மிகவும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 4 இந்த மாதத்தில் தான் தொடங்குமாம்.. போட்டியாளர்களுக்கு விதித்த கண்டிஷன்.. – cinefeeds
Connect with us

Uncategorized

மிகவும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 4 இந்த மாதத்தில் தான் தொடங்குமாம்.. போட்டியாளர்களுக்கு விதித்த கண்டிஷன்..

Published

on

பிக் பாஸ் தமிழ் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் 3 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் மற்றும் ஸ்டார் விஜய் சேனல் ஒளிபரப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. சீரியல்களுக்கு 60 பேர் என்றால் படப்பிடிப்புகளை நடத்தி முடித்து விடலாம். ஆனால், 17 போட்டியாளர்கள் மட்டும் வைத்து எடுக்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை எளிதில் எடுத்து முடிக்க முடியாது என்று விளக்கமளித்தள்ளது விஜய் டிவி.

வழக்கமாக ஜூன் மாதம் வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி விடும். ஆனால், இதுவரை பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு கூட இன்னும் நடக்கவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் 4 குறித்து விளக்கமளித்துள்ள விஜய் டிவி, கண்டிப்பாக பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நடக்கும். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக வேலைகள் துவங்கப்படவில்லை. மிகவும் வரவேற்பு பெற்ற ஒரு நிகழ்ச்சியை எப்படி நிறுத்த முடியும். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் பணிகளைத் தொடங்கவுள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.

Advertisement

போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் வரப்போகிறவர்களுக்கு கண்டிஷன் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும். இந்த கோவிட் லாக்டவுன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்துவிடும் நம்புவதால் செப்டம்பரில் ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வரும். நிச்சயம் கமல் சார் தான் தொகுப்பாளராக இருப்பார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in