LATEST NEWS
“என்னப்பா சொல்றீங்க… சமையல் ஒரு மாநிலத்தில்… தூக்கம் பக்கத்து மாநிலத்திலயா..! இந்தியாவின் விசித்திரமான வீடு… எங்க இருக்குன்னு தெரியுமா…?!”
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் உள்ள மகராஜ்கூடா கிராமத்தில் உத்தம் பவார் என்பவரின் வீடு, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநில எல்லையில் அமைந்துள்ளது. இவரது வீட்டில் மொத்தம் 8 அறைகள் உள்ளன. இதில் சமையலறை உட்பட 4 அறைகள் தெலங்கானா மாநிலத்திலும், படுக்கையறை உள்ளிட்ட மீதமுள்ள 4 அறைகள் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமைந்துள்ளன. வீட்டின் உள்ளே உள்ள சுவரில் எல்லைகளைப் பிரிக்கும் விதமாக கோடு வரையப்பட்டு, இரு மாநிலங்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.
கடந்த 1969-ஆம் ஆண்டில் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினை தீர்க்கப்பட்டபோது, பவார் குடும்பத்தினரின் நிலம் இரண்டு மாநிலங்களுக்குள் பிரிக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே அவர்களின் வீடும் இரண்டு மாநிலங்களுக்கு உட்பட்டதாகப் பிரிக்கப்பட்டது.
https://www.instagram.com/reel/DbGH8hzzmFu/?utm_source=ig_web_button_share_sheet
இந்தக் குடும்பத்தில் மொத்தம் 13 உறுப்பினர்கள் வசிக்கின்றனர். இவர்கள் இரு மாநிலங்களுக்கும் வரி செலுத்தி வருவதோடு, இரு மாநிலங்களின் நலத்திட்டங்கள் மூலமாகவும் பலன் பெறுகின்றனர். மேலும், இரு மாநிலப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களையும் வைத்துள்ளனர். வீட்டை விட்டு வெளியேறாமலேயே ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குச் செல்லும் இவர்கள், இதனால் இதுவரை எந்தவிதப் பிரச்சினையையும் சந்தித்ததில்லை என வீட்டின் உரிமையாளர் உத்தம் பவார் தெரிவித்துள்ளார்.
