CRIME
“அடச்சீ நீங்கெல்லாம் டாக்டரா..? ” மாதவிடாய் பிரச்சனைக்குப் போன 17 வயது சிறுமி..!” ஆனா அரசு மருத்துவர்கள் சொன்ன ஷாக்கிங் பொய்.. தனியார் பரிசோதனையில் அம்பலமான உண்மை.. மகாராஷ்டிரத்தை உலுக்கிய சம்பவம்..!!
மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண்-டோம்பிவலி பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் அரசு மருத்துவமனையில், மாதவிடாய் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்குக் குடும்பத்தினரின் அனுமதியின்றி கர்ப்பப் பரிசோதனை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசு மருத்துவமனையில் செய்யப்பட்ட மூன்று பரிசோதனைகளிலும் அவருக்குத் தொற்று மற்றும் கர்ப்பம் இருப்பது போன்ற தவறான நேர்மறை முடிவுகள் வந்துள்ளதாகக் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுமியைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அங்குப் பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையின் முறையற்ற மருத்துவ நடைமுறைகள் மற்றும் அலட்சியப் போக்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இந்த விவகாரம் மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் எழுப்பப்பட்டதை அடுத்து, மாநகராட்சி ஆணையர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கான விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தத் தவறான பரிசோதனை முடிவுகள் மற்றும் சிறுமிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு தொடர்பான சூழ்நிலைகளை முழுமையாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
