CRIME
“3 மாத கர்ப்பிணி என்றும் பாராமல்…” ஒடிசா காதலியை ஆந்திராவிற்கு அழைத்துச் சென்று காதலனே செய்த கொடூரம்.. குலைநடுங்க வைக்கும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கஜபதிநகரம் மண்டலம் மருபள்ளி பெட்ரோல் பங்க் அருகே ஒடிசாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரது காதலரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆலு மீனா (22) என்ற பெண்ணுக்கும், மோகன் கிலோ (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் விவகாரம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், அங்கன்வாடி அறிக்கை மூலம் அந்தப் பெண் மூன்று மாதக் கர்ப்பமாக இருப்பது அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 14 நாட்களாக அந்த இளம் பெண் திடீரென மாயமானதால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஒடிசாவில் உள்ள சிமிலிகுடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த ஒடிசா காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மாயமான இளம் பெண் ஆந்திராவின் மருபள்ளி பெட்ரோல் பங்க் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காதலன் மோகன் கிலோவே அந்தப் பெண்ணை ஆந்திராவிற்கு அழைத்து வந்து கொலை செய்ததை போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்கள் போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
