LATEST NEWS
“ஒருபக்க மீசைய மழிக்க ரெடியா இருங்க” நல்ல சாவு வராதுன்னு சொன்ன ஆர்.எஸ்.பாரதி.. தவெக எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் செம பதிலடி..!!
சென்னை சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர்களை விமர்சித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு, சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காரம்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, சட்டமன்றத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காத மக்களுக்கு ‘நல்ல சாவே வராது’ என்று மிகக் காரசாரமாக விமரிசித்திருந்தார்.
ஆர்.எஸ்.பாரதியின் இந்த சர்ச்சை பேச்சுக்குத் தவெக தரப்பில் இருந்து தற்பொழுது பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ இசிஆர் சரவணன், தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இதுகுறித்துப் பேசுகையில், ஆர்.எஸ்.பாரதியின் கருத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக, மாநகராட்சித் தேர்தலில் தவெக வென்றால் தனது ஒருபக்க மீசையை மழித்துக் கொள்வதாக ஆர்.எஸ்.பாரதி சவால் விட்டிருந்ததை இசிஆர் சரவணன் சுட்டிக்காட்டினார். அந்த சவாலை தவெக எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்றும், எனவே ஆர்.எஸ்.பாரதி தனது “மீசை மழிக்கும் சவாலுக்கு” முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தனது மேடைப் பேச்சில் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
