LATEST NEWS
“ஸ்டாலின் தலையில் பேரிடி.. திமுகவை அதிரவைத்த போன் கால்.. தவெக பக்கம் தாவும் வட மாவட்ட எம்.எல்.ஏ..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!”
தமிழக அரசியல் களத்தில் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையவிருப்பதாக வெளியாகிவரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் திமுக அமைச்சர் ஒருவரின் தூண்டுதல் இருப்பதாகவும், தன் மீதான வழக்குகளின் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதுகுறித்துத் தகவல்கள் அறிந்த உடனே, கட்சித் தலைமை உடனடியாகத் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
