LATEST NEWS
நாங்க பண்ணையாரின் பிள்ளைகளோ… மன்னர் ஆட்சியின் வாரிசுகளோ அல்ல… உங்களுக்கு எங்களை தெரியலையா சார்..? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த ஆதவ் அர்ஜுனா…!!
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் யார், எம்.எல்.ஏ.க்கள் யார் என்றே தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையிலேயே மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவாதம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக சார்பில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாக வந்திருப்பவர்கள் யாரும் பண்ணையாரின் பிள்ளைகளோ அல்லது மன்னர் ஆட்சியின் வாரிசுகளோ அல்ல என்று அதிரடியாகத் தெரிவித்தார். மாறாக, ஏழைகள், எளிய மக்கள், சமூகத்தில் சாதி மற்றும் மத ரீதியாகப் பலமற்ற விளிம்புநிலை மனிதர்கள்தான் இங்குப் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பாரம்பரிய அரசியல் பின்னணி இல்லாததால் எங்களுடைய பெயர்கள் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், இளைஞர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் எங்களின் பெயர் நன்றாகவே தெரியும் என்று நெத்தியடியாகப் பதிலளித்தார். வாரிசு அரசியல் என்ற தொனியை மறைமுகமாகக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த இந்த விளக்கம் சட்டப்பேரவை வளாகத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
