LATEST NEWS
“இது எந்த ஊரு நியாயம்.. 5 நிமிஷம் குளிச்சதுக்கு 1.3 லட்சம் அபராதமா..?” ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெண்ணுக்கு நடந்த ஷாக் சம்பவம்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்..!!
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியப் பெண் வமிகா, தனது குடியிருப்பில் வெறும் ஐந்து நிமிடங்கள் சுடுநீரில் குளித்தபோது எழுந்த நீராவியால் கட்டிடத்தின் தீ எச்சரிக்கை மணி இயங்கிய விவகாரம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குளியலறை மின்விசிறியை இயக்காமல் குளித்ததே இந்தத் தவறுக்குக் காரணம் என்று அவர் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இதுவொரு தீயணைப்புப் பயிற்சியாக இருக்கலாம் என அவர் நினைத்த நிலையில், கட்டிட மேலாளர் அவசரமாய் வந்து நின்ற பின்னரே நிலைமையின் தீவிரத்தை அவர் உணர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/DcF94nfxRWj/?utm_source=ig_embed&ig_rid=AWG6Yqim-X9jNs7cVeLbsdz
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை நடவடிக்கைக்கான செலவு எனக்கூறி அவருக்கு 1,800 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளியலறைக்கு மிக அருகில் தீ எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டிருப்பது குறித்தும், ஒரு சாதாரண குளியல் நீராவி எவ்வாறு இவ்வளவு பெரிய அலாரத்தை ஒலிக்கச் செய்தது என்பது குறித்தும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தத் தொகைக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும் என்றும், முதல் முறை என்பதால் அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதள பயனர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் ஆன்லைனில் தீயாகப் பரவி வரும் நிலையில், எச்சரிக்கை மணிகள் மிகவும் அதிக உணர்திறன் கொண்டதாக (High Sensitivity) அமைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்று பல நெட்டிசன்கள் வாதிட்டு வருகின்றனர். குடியிருப்பாளர்களின் சாதாரண அன்றாடச் செயல்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலிப்பது நியாயமற்றது என்றும், தீயணைப்பு வாகனத்தின் கட்டணத்தை அந்தப் பெண் செலுத்தத் தேவையில்லை என்றும் விவாதங்கள் வலுத்து வருகின்றன.
