அறங்காவலர் கண்ணீர் விட்டு அழுதார்… சிவன் சொத்து குல நாசம்… என்கிட்டயும் ஆதாரம் இருக்கு… சட்டப்பேரவையில் வெடித்த அமைச்சர் ரமேஷ், சேகர்பாபு மோதல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அறங்காவலர் கண்ணீர் விட்டு அழுதார்… சிவன் சொத்து குல நாசம்… என்கிட்டயும் ஆதாரம் இருக்கு… சட்டப்பேரவையில் வெடித்த அமைச்சர் ரமேஷ், சேகர்பாபு மோதல்..!!

Published

on

தமிழகச் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திருக்கோவில் நிலங்கள் தனிநபர் பெயரில் பட்டா மாறியிருப்பது மற்றும் கோவில் நகைகள் மறுமதிப்பீடு செய்யப்படாமல் உருக்கப்பட்டதாகக் கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. மேலும், அறங்காவலர் குழு நியமனத்தின் போது மறைமுகமாகச் சில சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டதை அடுத்து, அவைத்தலைவரால் ‘மறைமுகமாக’ என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “சிவன் சொத்து குல நாசம் என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியும்” என்று குறிப்பிட்டார். மேலும், எந்த அறங்காவலர் கண்ணீர் விட்டு அழுதார் என்பதை ஆதாரத்துடன் விளக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைப்பதிவில் ஏற்றக் கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய அமைச்சர், “சிவன் சொத்து குலம் நாசம் என்கிறார்களே, அது தொடர்பாகப் பல ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளோம்; அவை விரைவில் வெளியிடப்படும்” என்று கூறினார். இவ்வாறாக, சட்டசபையில் இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in