“என்கிட்டயே லஞ்சம் வாங்கினாங்க” வேண்டுமானால் வழக்கு போடுங்கள், ஆதாரத்தோடு நிரூபிப்பேன்… அன்பில் மகேஷிற்கு ஷாக் கொடுத்த அமைச்சர் மரிய வில்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்கிட்டயே லஞ்சம் வாங்கினாங்க” வேண்டுமானால் வழக்கு போடுங்கள், ஆதாரத்தோடு நிரூபிப்பேன்… அன்பில் மகேஷிற்கு ஷாக் கொடுத்த அமைச்சர் மரிய வில்சன்..!!

Published

on

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 40 ஆண்டுகளாக ஐஎஸ்ஓ (ISO) தரச்சான்றிதழ் பெறப்படவில்லை என்ற அதிரடியான தகவலை உயர்கல்வித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். கல்வித்துறையின் தரம் மற்றும் நிர்வாக மேம்பாடு குறித்துப் பேசிய அவர், கடந்த கால ஆட்சிகளில் உயர்கல்வித்துறையில் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதை இந்த நீண்டகால அலட்சியம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், கல்வித்துறையில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளால் தானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் மரிய வில்சன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கடந்த திமுக ஆட்சியின் போது, சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து தன்னிடம் லஞ்சம் வாங்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மறைமுகமாக இந்த ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Advertisement

திமுகவினர் மீதான இந்த லஞ்சக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சவால் விடுத்துள்ள அமைச்சர் மரிய வில்சன், “என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள், நான் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்” என அதிரடியாகக் கூறியுள்ளார். இத்துறையில் உள்ள முறைகேடுகளை முழுமையாகக் களைந்து, அரசு கல்லூரிகளின் தரத்தை உலகளாவிய நிலைக்கு உயர்த்துவதே தங்களது நோக்கம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in