LATEST NEWS
“அடுத்த டார்கெட்.. பேரன் டிரம்ப்.. எங்களுக்காகக் காத்திரு..!” அமெரிக்க அதிபருக்கு ஈரான் விடுத்த மெகா சவால்.. உலகப் போர் மூளும் அபாயத்தில் சர்வதேச அரசியல்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 வயது மகனான பேரன் டிரம்பை எங்கே, எப்படிப் படுகொலை செய்வது என்ற விபரங்களுடன் 95 கோடி ரூபாய் வெகுமதியை அறிவித்து ஈரான் அரசு தொலைக்காட்சி சேனல் 2 நிமிடக் கொடூர எச்சரிக்கை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையால் தயாரிக்கப்பட்ட அந்த வீடியோவில், பேரன் டிரம்ப் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே வந்து எக்ஸ்பாக்ஸ், டிஸ்கார்ட் மற்றும் ஃபிஃபா வீடியோ கேம்கள் மூலம் குரல் மற்றும் குறுஞ்செய்திகளைப் பயன்படுத்தி வருவதாகவும், அவனது கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்குப் பொருளாதாரப் பேரழிவு நாள் தொடங்கிவிட்டது என அதிபர் டிரம்ப் எச்சரித்த சில நாட்களிலேயே, ‘இது வெறும் ஆரம்பம் தான், பேரன் டிரம்ப் எங்களுக்காகக் காத்திருங்கள்’ என்ற நேரடி மிரட்டலுடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த மாதம், டொனால்ட் டிரம்பின் மகளான மெலானியாவை நியூயார்க் நகரம் முழுவதும் பின்தொடர்ந்து, அவரது ஆடம்பரக் கடைகளை அடையாளம் காட்டி, நரம்பு மண்டல நச்சுப் பொருள் மூலம் எப்படிக் கொலை செய்யலாம் என்ற விசித்திரமான கொடூரக் காணொளியையும் ஈரான் வெளியிட்டிருந்தது. அடுத்தடுத்து மெலானியா மற்றும் பேரன் ஆகிய இருவரையும் குறிவைத்து ஈரானிய அரசு ஊடகங்கள் ரகசியத் தகவல்களை வெளியிட்டு வருவதால், அதிர்ச்சி அடைந்த அமெரிக்க ரகசிய சேவைஅவர்களுக்கு 24 மணி நேர உச்சக்கட்டப் பாதுகாப்பை அள்ளிக் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகை, நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர், மார்-அ-லாகோ எஸ்டேட் உட்பட டிரம்பின் அனைத்து பில்லியனர் சொத்துக்களும் தற்போது அசைக்க முடியாத ராணுவப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
