ஓபிஎஸ் தலையில் விழுந்த இடி..! அதிமுகவில் இணைந்த ஆதரவாளர்கள்.. செம குஷியில் எடப்பாடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓபிஎஸ் தலையில் விழுந்த இடி..! அதிமுகவில் இணைந்த ஆதரவாளர்கள்.. செம குஷியில் எடப்பாடி..!!

Published

on

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து எம்எல்ஏ ஆனதால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான திருவட்டார் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன் மற்றும் குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ஆகியோர் ஓபிஎஸ்ஸின் அரசியல் முடிவுகளால் ஏமாற்றமடைந்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் எடுத்த இந்த அரசியல் மாற்றம் அவரது தீவிர ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக, முன்னாள் குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவராகவும் இருந்த ஆர்.முருகன் மற்றும் ஜெஸ்டின் ஆகிய இருவரும் தங்களை மீண்டும் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் இந்த தாய்க்கழகம் திரும்பும் முடிவு கன்னியாகுமரி மாவட்ட ஓபிஎஸ் அணியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in