LATEST NEWS
எனக்கு சுகர் இருக்கு… ரொம்ப வேதனையா இருக்கு அதனால… சட்டப்பேரவையில் ஓபிஎஸ் உருக்கமான கோரிக்கை..!!
தமிழக சட்டப்பேரவையில் நேற்று காரசாரமான விவாதம் ஏற்பட்டது. திமுக மற்றும் TVK எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே கடுமையான வார்த்தை போர் நடந்த நிலையில், TVK உறுப்பினர் ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை ‘கலைஞர்’ எனக் குறிப்பிடாமல் ‘கருணாநிதி’ என்று நேரடியாகக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உறுப்பினர்கள் உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், “முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், அதிமுக உறுப்பினர் ஒருவர் கருணாநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டபோது, அவ்வாறு சொல்லக்கூடாது ‘கலைஞர்’ என்றுதான் அழைக்க வேண்டும் எனக்கூறி அந்த உறுப்பினரை எம்.ஜி.ஆர் மன்னிப்பு கேட்க வைத்தார்” என்ற வரலாற்று நிகழ்வைச் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, TVK உறுப்பினர் பேசிய பேச்சுக்காக முதலமைச்சர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய ஓ.பி.எஸ், “காலை 9.30 மணிக்குத் தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் மாலை வரை நீடிப்பதால், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பல உறுப்பினர்கள் மயக்கம் அடைந்து விழும் சூழல் உருவாகி வேதனை அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார். எனவே, உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பேரவைக் கூட்டத்தை விரைவாக முடித்துக்கொள்ள வேண்டும் எனச் சபாநாயகரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
