ஐயோ கடவுளே..! கணவனின் தம்பி என்றும் பாராமல் நடுரோட்டில் அண்ணியின் வெறிச்செயல்.. கொழுந்தனுக்கு நேர்ந்த விபரீதம்.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே..! கணவனின் தம்பி என்றும் பாராமல் நடுரோட்டில் அண்ணியின் வெறிச்செயல்.. கொழுந்தனுக்கு நேர்ந்த விபரீதம்.. குலை நடுங்க வைக்கும் பின்ணணி..!!

Published

on

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சொத்து தகராறு காரணமாக, 63 வயது முதிய பெண் ஒருவர் தனது கொழுந்தனை உருட்டுக் கட்டையால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய பகீர் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பெருமாள்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (60) என்ற பிளம்பர் தொழிலாளிக்கும், அவரது அண்ணன் பாலசுப்பிரமணியனின் மனைவி பொன்னம்மாளுக்கும் (63) இடையே நீண்ட நாட்களாகச் சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, தெருவில் நின்றிருந்த பொன்னம்மாள் அவருடன் நள்ளிரவு விபரீதம் போலக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரத்தில் அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த பாலகிருஷ்ணனை உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரத் தாக்குதலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய அண்ணி பொன்னம்மாள் மீது, பாலகிருஷ்ணனின் மகன் மனோஜ் குமார் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in