LATEST NEWS
நெஞ்சை உறைய வைக்கும் அந்த 15 நொடிகள்..! தண்ணீரில் சொகுசாக படுத்திருந்த பெண்…. திடீரென பாய்ந்து வந்த ராட்சத எமன்… திக் திக் வீடியோ வைரல்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு திகிலூட்டும் வீடியோவில், இளம்பெண் ஒருவர் குளத்தின் ஆழமில்லாத நீரில் நிம்மதியாக படுத்திருந்தபோது, திடீரென ஒரு முதலை அவரது கால்களை நோக்கி பாய்ந்து தாக்கியுள்ளது. அந்தப் பெண் உடனடியாக அங்கிருந்து ஓடி, நூலிழையில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
இளஞ்சிவப்பு நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்த அந்தப் பெண், ஆற்றின் கரையில் முதலில் அமர்ந்து, பின்னர் தண்ணீரில் முழுமையாக படுத்து ஓய்வெடுக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் மறைந்திருந்த ஒரு பெரிய முதலை திடீரென வெளியே வந்து, அவரது கால்களைக் கடிக்க பாய்ந்ததால் அந்த இடமே பரபரப்பானது.
முதலை பாய்ந்த வேகத்தில் நிலைகுலைந்த அந்தப் பெண், உடனடியாக தண்ணீரில் இருந்து எழுந்து கரையை நோக்கி ஓடுகிறார். முதலையின் இலக்கு சில இன்ச்கள் வித்தியாசத்தில் தவறியதால், அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் எடுப்பதற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ ஆபத்தான நீர்நிலைக்கு அருகில் சென்ற இந்த பெண்ணின் வீடியோ, தற்போது இணையத்தில் பார்ப்பவர்களை உரைய வைத்து வேகமாக பரவி வருகிறது.
