LATEST NEWS
ஐய்யோ… நடைப்பயிற்சி சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்… சொகுசு கார் மோதியதில் முதியவர் துடிதுடித்து உயிரிழப்பு… விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய டிரைவருக்கு தீவிர வலைவீச்சு..!!
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா . இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வேகமாக வந்த சொகுசு கார் கைலாஷ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கைலாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று கைலாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்
