LATEST NEWS
அடடே.. ஸ்மார்ட்போன் இல்லையா..? கவலையை விடுங்கள்..! இனி பட்டன் போன் வச்சிருக்கவங்களும் மாஸ் பண்ணலாம்..! போன்பே-காரங்க கொண்டுவந்த செம்ம ஆஃபர்..!!
ஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் முன்னணியில் உள்ள போன்பே நிறுவனம், ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இல்லாத பயனர்களுக்காக ‘போன்பே 123பே’ என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சேவையின் மூலம் பயனர்கள் இனி இணையதள இணைப்பு இல்லாமலேயே தங்களது போன்களிலிருந்து எளிதாகப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவில் முதன்முறையாக ஒரு முன்னணி பணப்பரிவர்த்தனை செயலி நிறுவனம் இத்தகைய சேவையை அறிமுகம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த புதிய தொழில்நுட்பம் எஸ்.எம்.எஸ் மற்றும் போன்பே நிறுவனத்தின் பிரத்யேகத் தொழில்நுட்பக் கட்டமைப்பின் அடிப்படையில் செயல்படுகிறது. எனவே, மிகக் குறைந்த அளவிலான 2G நெட்வொர்க் இணைப்பு வசதி கொண்ட பகுதிகளில் கூட தடையின்றி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த சேவையை பட்டன் போன்களிலேயே முன்கூட்டியே வழங்கிடும் வகையில் நோக்கியா, எச்.எம்.டி, லாவா மற்றும் ஐடெல் போன்ற முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒப்பந்தம் செய்துள்ளது.
நாட்டிலுள்ள சுமார் 20 கோடிக்கும் அதிகமான ஃபீச்சர் போன் பயனர்களை டிஜிட்டல் பொருளாதாரத்திற்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பயனர்கள் இச்சேவையை எளிதாகப் பயன்படுத்த ஏதுவாக, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் குரல்வழி உதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் வழிகாட்டுதல்களை வழங்கும். இதன் மூலம் பயனர்கள் நேரடியாகப் பணம் அனுப்புவது, கடைகளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது, வங்கி கணக்கு பேலன்ஸ் சரிபார்ப்பது போன்ற வசதிகளைப் பெற முடியும்.
