LATEST NEWS
“இதென்ன கொடுமையா இருக்கு!” -மனைவியின் கள்ளக்காதலை ஆதாரத்தோடு நிரூபிச்ச புருஷனுக்கு 5 மாசம் ஜெயில் தண்டனை.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
தைவானில், தனது மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை ஆதாரத்துடன் நிரூபித்த கணவருக்கு, நீதிமன்றமே 5 மாத சிறைத்தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது மனைவியின் தவறான நடத்தையை நீதிமன்றத்தில் நிரூபித்து, அவரிடமிருந்து இழப்பீடு பெற்ற சில நாட்களிலேயே, அந்த கணவரே குற்றவாளியாக மாறி சிறைக்குச் செல்லும் விசித்திரமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டுள்ளது .
இந்தத் தண்டனைக்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர் பயன்படுத்திய ஆதார முறைதான் . வீட்டில் இருந்த ரோபோட் வேக்யூம் கிளீனரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ரகசியமாகப் பயன்படுத்தி, தனது மனைவியின் தனிப்பட்ட தருணங்களை அவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் . இந்த வீடியோக்களை நீதிமன்றத்தில் முதன்மை ஆதாரமாகச் சமர்ப்பித்து, அவர் வழக்கில் வெற்றியும் பெற்றார் .
இருப்பினும், தனது அனுமதியின்றி தனது தனிப்பட்ட அந்தரங்கத் தருணங்களை ரகசியமாகப் பதிவு செய்ததாக மனைவி தரப்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது . இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவரின் செயல் தனிமனித உரிமையைப் பறிக்கும் குற்றச் செயல் என உறுதி செய்து, அவருக்கு 5 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது
