“என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல சார், விட்ருங்க..!”ஏழை ஓட்டுநரை மிரட்டி பூட்டி வைத்து முதலாளியின் அசுர வெறியாட்டம்… வீடியோவை வெளியிட்டு ஓட்டுநர் கதறல்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல சார், விட்ருங்க..!”ஏழை ஓட்டுநரை மிரட்டி பூட்டி வைத்து முதலாளியின் அசுர வெறியாட்டம்… வீடியோவை வெளியிட்டு ஓட்டுநர் கதறல்….!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் கோத்ரா பகுதியில், டிவஎஸ் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை இறக்குவதற்காக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், காரின் கண்ணாடி உடைந்ததற்காகக் கடந்த 6 நாட்களாகச் சட்டவிரோதமாகச் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று, லாரியின் அதீத உயரம் காரணமாகச் சாலையிலிருந்த மின்கம்பத்தின் விளக்கு ஒன்று தற்செயலாக அங்கிருந்த கார் ஷோரூம் மீது விழுந்துள்ளது. இதில் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த புதிய கார் ஒன்றின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இந்த விபத்தால் ஆத்திரமடைந்த கார் ஷோரூம் உரிமையாளர், சேதத்திற்கு இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று லாரி ஓட்டுநரை மிரட்டியுள்ளார்.

https://twitter.com/SitamarhiJila/status/2094616539836334115/video/1

Advertisement

இதற்குப் பதிலளித்த அந்த ஏழை ஓட்டுநர், எதிர்பாராமல் நடந்த இந்த விபத்திற்குத் தன்னால் 5 ஆயிரம் அல்லது 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே தர முடியும் என்று கூறி, அந்தச் சேதத்திற்கான நியாயமான தொகையை ஏற்கத் தயாராக இருப்பதைத் தெரிவித்துள்ளார். ஆனால், அதனை ஏற்க மறுத்த கார் ஷோரூம் உரிமையாளர், கேட்கும் முழுத் தொகையையும் தரும் வரை ஓட்டுநரை விடமாட்டோம் என்று கூறி, கடந்த 6 நாட்களாக அவரைத் தனது கட்டுப்பாட்டில் கொடூரமான முறையில் சிறைபிடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஏழை ஓட்டுநர் கூறிய வீடியோ வைரலாகி மக்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பையும், அநீதிக்கு எதிரான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in