LATEST NEWS
“முதல்ல எனக்கு நீங்க எல்லாரும் பிராமிஸ் பண்ணுங்க…” எதிர்கட்சியை வாயடைக்க வைத்த முதல்வர் முதல்வர் விஜய்.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே “யாரும் ஓடிவிடக் கூடாது” என அனல் பறக்கும் மாபெரும் நேரடி வார்த்தை மோதல் வெடித்துள்ளது. தற்போதைய தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த உதயநிதி ஸ்டாலின், “முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் மூன்று நாட்கள் நேரம் இருக்கிறது, நன்றாகப் படித்துத் தயாராகிவிட்டு வாருங்கள்” என்று அவையில் அதிரடி சவால் விடுத்தார். இதற்குச் சபாநாயகர், முதலமைச்சர் எப்போதும் தயாரான நிலையில் தான் வந்துள்ளார் என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே காரசாரமான வாக்குவாதம் நீடித்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் திங்கட்கிழமை நான் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன். ஆனால் உங்களிடம் ஒரு பிராமிஸ் கேட்கிறேன், நான் பதில் சொல்லும்போது யாரும் அவையை விட்டு எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது” என்று அசுரத்தனமாகத் பதிலடி கொடுத்தார். முதலமைச்சர் விஜய் தனது பேச்சை முடித்துவிட்டு அவையை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, மீண்டும் மைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், “சட்டசபையில் இருந்து இப்போது யார் ஓடியது என்று அனைவருக்கும் நன்றாகத் தெரியும், 3 நாட்கள் பிரிப்பேர் செய்துவிட்டு வரட்டும்” என்று நக்கல் பாணியில் வறுத்தெடுத்தார்.
