திமுக – அதிமுக திரைமறைவு உடன்பாடு..? EPS அந்த ஒரு விஷயத்திற்காக திமுகவில் செட்டில் ஆகிவிட்டார்… கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய அமைச்சர் CTR..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திமுக – அதிமுக திரைமறைவு உடன்பாடு..? EPS அந்த ஒரு விஷயத்திற்காக திமுகவில் செட்டில் ஆகிவிட்டார்… கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பிய அமைச்சர் CTR..!!

Published

on

அதிமுக தற்போது யார் தலைமையில் செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலவரத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள அமைச்சர், அவர் தனது சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் திரைமறைவில் திமுகவோடு ‘செட்டிலாகிவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுகவில் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் தலைமை யார் என்ற குழப்பத்தில் தவித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

மேலும், அதிமுகவில் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டு, அடுத்த கட்டம் என்னவென்று தெரியாமல் திகைத்து நிற்கும் மாற்றுக்கட்சியினருக்குத் தவெக உரிய அங்கீகாரமும், மரியாதையும் கொடுக்கும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அழைப்பு விடுத்துள்ளார். தவெகவின் இந்தத் திறந்த அரசியல் நகர்வு மற்றும் அமைச்சரின் பேச்சு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in