LATEST NEWS
“தாய்ப்பாலா… இல்லை கேன்சரை உருவாக்கும் விஷமா..?” பள்ளிக்கரணை ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை…! சட்டப்பேரவையில் கதறிய செளமியா அன்புமணி..!!
பள்ளிக்கரணை பகுதியில் தாய்ப்பாலில் புற்றுநோயை உருவாக்கும் ‘டையாக்சின்’ விஷப்பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து பேரவையில் செளமியா அன்புமணி கடும் கவலை தெரிவித்துள்ளார். நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோமா அல்லது கேன்சரை உருவாக்கும் டையாக்சினைக் கொடுக்கிறோமா என்ற அதிர்ச்சி தரும் கேள்வியை எழுப்பிய அவர், வளர்ச்சி மற்றும் தொழிற்சாலைகள் என்ற பெயரில் கடைசியில் நாம் டையாக்சினைதான் வளர்த்துள்ளோம் எனச் சுட்டிக்காட்டினார்.
தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் விளைவாகவே இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்கள் தாய்ப்பாலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். வளர்ச்சி என்ற நோக்கில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் சுற்றுச்சூழலையும், மக்களின் – குறிப்பாகக் குழந்தைகளின் – ஆரோக்கியத்தையும் பாழாக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துவதாகவும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
