“ஐயோ கடவுளே..! 10 அடி ஆழக் குளத்தில் மூழ்கிய கார்..” 11 மாதக் குழந்தையின் அழுகுரல் கேட்டுப் பாய்ந்த 38 வயதுத் தாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் மிராக்கிள்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே..! 10 அடி ஆழக் குளத்தில் மூழ்கிய கார்..” 11 மாதக் குழந்தையின் அழுகுரல் கேட்டுப் பாய்ந்த 38 வயதுத் தாய்.. நெஞ்சை நெகிழவைக்கும் மிராக்கிள்..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும் செய்வதறியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இக்கட்டான நொடிக் கட்டத்தில், 38 வயதான சுர்தா பார்மர் என்ற தைரியமிக்க பெண்மணி காரின் உள்ளேயிருந்து வந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரலைக் கேட்டுச் சற்றும் தாமதிக்காமல் குளத்திற்குள் குதித்துள்ளார். கார் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், இரும்புச் கம்பி ஒன்றைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து, முதலில் அந்த 11 மாதக் குழந்தையை அவர் பத்திரமாக வெளியே மீட்டுள்ளார்.

அவருக்கு உதவியாகக் கரையில் நின்ற அவரது 15 வயது மகள் ஆயுஷி, கயிறுகளின் துணையோடு காரின் உள்ளே சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையின் பெற்றோரையும் தண்ணீருக்குள் இருந்து மீட்கத் தனது தாய்க்குப் பேருதவி புரிந்துள்ளார். மீட்கப்பட்ட தம்பதியர் உதய்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்பொழுது உயிர் பிழைத்துள்ள நிலையில், குழந்தை சிகிச்சைக்குப் பின் நலமுடன் வீடு திரும்பியுள்ளது. ஆபத்தான நேரத்தில் மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபோதும், ஒரு தாயாகக் குழந்தையின் அழுகுரலைப் பொறுக்க முடியாமல் அசாத்தியத் துணிச்சலுடன் குதித்துக் காப்பாற்றிய சுர்தா பார்மர் மற்றும் அவரது மகளின் இந்த வீரச் செயல் நிஜமான மனிதநேயத்தின் அடையாளமாக நாடு முழுவதும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in