CRIME
“அடப்பாவமே… 5 பவுன் பித்தளையைக் கொடுத்துட்டு ரூ.6.30 லட்சத்துக்குத் தங்கம்..!” சிதம்பரத்தில் நடந்த சினிமா பாணி மோசடி.. நகைக்கடைக்கே அல்வா கொடுத்த 3 பேர் கைது..!!
சிதம்பரத்தில் உள்ள நகைக்கடையில் போலி நகைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக ரூ.6.30 லட்சம் புதிய தங்க நகைகளைப் பெற்று மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் இஸ்மாயில் ஷெரிப் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி புர்கா அணிந்த பெண் உள்ளிட்ட 3 பேர் பழைய நகைகளைக் கொடுத்து 5 பவுன் புதிய நகைகளைப் பெற்றுச் சென்றனர். மறுநாள் மதிப்பீடு செய்தபோது அவை போலி நகைகள் என தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சேலம் எஸ்ஆர்எம் தோட்டத்தைச் சேர்ந்த ராதா, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மதன், மல்லூரைச் சேர்ந்த கபாலி என்ற சுப்பிரமணியன் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் அடைத்தனர்.
