பாவி..! வெறும் 2,000 ரூபாய்க்காக இப்படியா..? 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற கணவன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

பாவி..! வெறும் 2,000 ரூபாய்க்காக இப்படியா..? 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொன்ற கணவன்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் வெறும் 2,000 ரூபாய் பணத் தகராறு காரணமாக, 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கணவனே மூங்கில் தடியால் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. இங்குள்ள மயோரா கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி விஷால் பால் என்பவருக்கும், கிரண் (24) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தான் கொடுத்த பணத்திற்கு விஷால் கணக்கு கேட்டபோது, கிரண் குடும்ப எதிர்காலத் தேவைக்காக 2,000 ரூபாயைச் சேமித்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மதுபோதையில் ஆத்திரமடைந்த விஷால், மனைவியை மூங்கில் தடியால் தாக்கியதுடன், தடுக்க வந்த தாயையும் வெளியே தள்ளினார். அக்கம் பக்கத்தினர் உதவிக்கு வராத நிலையில், அவசர உதவி எண் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் கிரணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் கிரண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தலைமறைவான விஷாலைக் கைது செய்துள்ள போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in