“முதியோர் உதவித்தொகை வாங்குபவரா நீங்க..?” தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘அந்த’ ஒரு முக்கிய அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதியோர் உதவித்தொகை வாங்குபவரா நீங்க..?” தமிழக அரசு வெளியிட்டுள்ள ‘அந்த’ ஒரு முக்கிய அறிவிப்பு..!!

Published

on

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் மாதாந்திர ஓய்வூதியத் தொகை தற்பொழுது வரை வரவு வைக்கப்படாததால் பல மாவட்டங்களைச் சேர்ந்த முதியோர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிடும். ஆனால், நடப்பு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம், கரூர், தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் லட்சக்கணக்கான பயனாளிகளுக்குத் தொகை இன்னும் கிடைக்கவில்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சமூக நலத்துறை அதிகாரிகள், மாநில அரசுக்கான நிதியுதவிப் பங்குகள் அனைத்தும் முறையாக ஒதுக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அரசின் தேசியப் பொது நிதி மேலாண்மை அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், பணப் பரிவர்த்தனைகள் சரிபார்ப்பதில் தாமதம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள நிலுவைத் தொகைகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, வரும் திங்கள் கிழமை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் தடையின்றித் தொகை வரவு வைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in