CRIME
“யார் கூட பேசிட்டு இருக்க..” ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற கள்ளக்காதலன்.. காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
திருப்பூர் பெரிச்சிப்பாளையம் பகுதியில், வேறு ஒரு ஆணுடன் செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, பனியன் நிறுவனத் தொழிலாளி ஒருவர் தனது கள்ளக்காதலியை நள்ளிரவில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரியலூர் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா என்ற தையல் தொழிலாளி, கணவரைப் பிரிந்து திருப்பூரில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் வேலை செய்த அதே பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த அருண்குமார் (36) என்ற திருமணம் ஆகாத வாலிபருடன் கடந்த 2 ஆண்டுகளாகக் கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ராதிகா அடிக்கடி வேறொரு நபருடன் செல்போனில் பேசியதால், அவர் மீது அருண்குமாருக்குக் கடுமையான நடத்தை சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே தொடர் தகராறு வெடித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு ராதிகாவின் வீட்டிற்கு வந்த அருண்குமார், மீண்டும் செல்போன் விவகாரம் குறித்துக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற அருண்குமார், ராதிகாவின் கழுத்தை நெரித்துக் கீழே தள்ளியதில், கட்டிலில் தலை மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது ராதிகா பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து திருப்பூர் தெற்கு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், தலைமறைவாக இருந்த கொலையாளி அருண்குமாரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
