அம்மா தாயே… எங்க நிம்மதியை கெடுக்காத… கேமரா எங்க இருக்குன்னு தெரிஞ்சே…. லண்டனில் த்ரிஷா வேணுமின்னே செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்ஸ்..!! – cinefeeds
Connect with us

CINEMA

அம்மா தாயே… எங்க நிம்மதியை கெடுக்காத… கேமரா எங்க இருக்குன்னு தெரிஞ்சே…. லண்டனில் த்ரிஷா வேணுமின்னே செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்ஸ்..!!

Published

on

லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய மைதானத்திற்கு நடிகை த்ரிஷா திடீரென என்ட்ரி கொடுத்த சம்பவம், இணையவாசிகளையும் தவெக தொண்டர்களையும் மாபெரும் கடுப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது! தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 6 நாட்கள் அரசுமுறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதலமைச்சர் ஜோசஃப் விஜய், லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் அஜித் பங்கேற்ற கார் ரேஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மைதானத்திற்கு வந்த விஜய்யை அஜித்குமார் ஆரத்தழுவி வரவேற்றார். பின் இருவரும் அங்கு கூடியிருந்த ரசிகர்களைப்பார்த்து கைசைத்தனர். தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவான்களையும் ஒரே இடத்தில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நிலைக்காமல் அனைவரின் முகமும் திடீரென மாறியது. அதற்கு காரணம் த்ரிஷா அங்கு வந்தது தான்.

முன்னதாக முதலமைச்சர் லண்டன் செல்கிறார் என்ற தகவல் வந்தபோதே, த்ரிஷாவும் லண்டனில் இருக்கும் வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால், படப்பிடிப்பிற்காகத்தான் லண்டன் வந்தேன் என போட்டோ போட்டு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்ததால் தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். ஆனால், நேற்று விஜய் கார் ரேஸுக்கு சென்ற சிறிது நேரத்திலேயே த்ரிஷாவும் அங்கு வந்து நின்றதை பார்த்த நெட்டிசன்களும் தவெக தொண்டர்களும் கடுப்பின் உச்சத்திற்கே சென்றனர்.

Advertisement

கேலரியில் நின்றபடி முதல்வர் விஜய் கார் ரேஸை பார்த்து கொண்டிருக்கும் போது, நடிகை த்ரிஷா திடீரென உள்ளே புகுந்து வந்து எட்டிப்பார்த்தார். த்ரிஷாவை பார்த்த உடனே முதலமைச்சர் விஜய் சட்டென தன் முகத்தை திருப்பிக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. அதைப்பார்த்த எங்கு கேமிரா இருக்கிறது என்று தெரிந்து கொண்டு தான் த்ரிஷா இப்படி ஒரு வேலையை செய்து இருக்கிறார் என கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். “அம்மா தாயே.. நீ எங்க அண்ணாவோட நிம்மதியை மட்டும் கெடுக்கல… அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களோட நிம்மதியையும் சேர்த்துக் கெடுக்கிற” என்றும், “இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்னா சங்கீதா அக்காவும் விஜய் அண்ணாவும் மீண்டும் இணையணும், எங்க போனாலும் ரெண்டு பேரும் ஜோடியா போகணும். ஒரு குடும்பத்தோட நிம்மதியை கெடுக்குறீங்க… அண்ணா பெயரை கெடுக்காதீங்க” எனக் கூறி த்ரிஷாவுக்கு எதிராக ஏராளமான மீம்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் இணையவாசிகள் கொட்டி தீர்த்து வருகின்றனர்!

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in