LATEST NEWS
“வெறும் போட்டோக்கள் மட்டும்தான் ரிலீஸ் ஆகுது..!” CM விஜய்யின் லண்டன் டூரை கிழித்து தொங்கவிட்ட EPS.. அரசியலில் பரபரப்பு..!!
தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் லண்டன் பயணத்தைஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே முதலமைச்சர் லண்டன் சென்றிருக்கிறார் என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலோ அல்லது முதலீடுகளை ஈர்த்ததற்கான செய்திகளோ இதுவரை வெளியாகவில்லை என்று சாடினார். மேலும், லண்டனில் இருந்து அவர் யாரையோ சந்திப்பது போன்ற புகைப்படங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கின்றனவே தவிர, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்தவொரு ஆக்கப்பூர்வமான கூட்டத்திலும் அவர் பங்கேற்றதாகத் தெரியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து தவெக அரசைச் சாடிய எடப்பாடி பழனிசாமி, இந்த தவெக ஆட்சியில் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று நேரடியாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் தற்போது விவசாயிகள், மீனவர்கள் எனப் பல தரப்பினருக்கும் பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில், முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொண்டு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதில் எந்தவொரு அவசரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல், வெறும் விளம்பர அரசியல் மற்றும் சமூக வலைத்தளப் பிம்பங்களை மட்டுமே தவெக அரசு முன்னிறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் சாடியுள்ளார்
