BREAKING: விநாயகர் சதுர்த்தி பந்தலின் அருகே மின்கசிவு – 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: விநாயகர் சதுர்த்தி பந்தலின் அருகே மின்கசிவு – 2 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்..!!

Published

on

மும்பை லால்பாக் காலாசௌகி பகுதியில் விநாயகர் சதுர்த்தி பந்தலின் அருகே ஏற்பட்ட பயங்கர மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி சிறுமி உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பண்டிகைக் காலத்தையொட்டி அப்பகுதியில் பெருமளவில் மக்கள் கூடியிருந்த நள்ளிரவு 2:20 மணி அளவில் இந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பந்தல் நுழைவாயிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிநீர் மற்றும் குளிர்பானக் கடையில்தான் இந்த மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மின் இணைப்பைத் துண்டித்து, அப்பகுதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக, கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in