CRIME
“இவர்தான் என் உலகம்…” கணவன், 3 குழந்தைகளைத் விட்டு காதலனுடன் ஓடிய பெண்..! கடைசியில் குப்பை மேட்டில் சிக்கிய அழுகிய உடல்..! பின்னணியில் நடந்தது என்ன..?!
உத்தர் பிரதேசம் பிஜ்பூர் மாவட்டம் ரேஹட் பகுதியைச் சேர்ந்த சாதக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ருக்சானா என்பவர் மும்பையில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவரது அழுகிய உடல் பாந்த்ரா பகுதியில் குப்பை மேடு மற்றும் புதர்களுக்கு இடையில் கண்டெடுக்கப்பட்டது. ருக்சானா சுமார் மூன்று வாரங்களாகக் காணாமல் போயிருந்த நிலையில், தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளைக் கைவிட்டுவிட்டுத் தன் காதலன் முகமது சாகிப் சித்திக் என்பவருடன் மும்பைக்குச் சென்றிருந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ருக்சானாவிற்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முராதாபாத் கந்த் பகுதியைச் சேர்ந்த நயீம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த முகமது சாகிப் சித்திக் என்பவருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சாகிப் மும்பையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர்களுக்கிடையேயான நெருக்கம் அதிகரித்ததை அடுத்து, ருக்சானா தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு கடந்த ஜூலை 9ஆம் தேதி சாகிப்புடன் மும்பைக்குச் சென்றார். அங்கு அவர்கள் சாந்தாகுரூஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த உறவில் சிக்கல் என்னவென்றால், சாகிப் ஏற்கனவே திருமணமானவர் ஆவார். அவரது முதல் மனைவியும் மும்பையில்தான் அவருடன் வசித்து வந்துள்ளார். இதனால் அவர்களது வீட்டில் அடிக்கடி தகராறும் பதற்றமும் நிலவி வந்துள்ளது. காதலன் சாகிப் அளித்த தகவலின்படி, அவர் செப்டம்பர் 27ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது ருக்சானாவைக் காணவில்லை. அதன் பின்னர் பாந்த்ரா குப்பை மேட்டிலிருந்து அவரது அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, காதலன், அவரது முதல் மனைவி மற்றும் பெண்ணின் பெற்றோர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
