அய்யயோ.. கிணற்றுக்குள் விழுந்த 4 வயது தங்கை… காப்பாற்றக் குதித்த 18 வயது அக்காவுக்கு நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அய்யயோ.. கிணற்றுக்குள் விழுந்த 4 வயது தங்கை… காப்பாற்றக் குதித்த 18 வயது அக்காவுக்கு நேர்ந்த கதி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

தெலுங்கானா முலுகு மாவட்டத்தில் விடுமுறை நாளான நேற்று, தந்தையுடன் விவசாய நிலத்திற்குச் சென்ற அக்கா மற்றும் தங்கை என இரு சகோதரிகள் தற்செயலாகக் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சோகச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் சற்றுத் தொலைவில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், 18 வயதான முகமது சம்யுக் மற்றும் அவரது 4 வயது தங்கை முகமது ஆசியா ஆகிய இருவரும் அருகில் இருந்த ரஹீம் கிணற்றைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது 4 வயது தங்கை ஆசியா தற்செயலாகக் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

கிணற்றில் விழுந்த தனது குட்டித் தங்கையைக் காப்பாற்றுவதற்காக அக்கா சம்யுக் உடனடியாகக் கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால், எதிர்பாராத விதமாக இருவருக்குமே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீஸார், இரு சகோதரிகளின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக முலுகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்; இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in