“லஞ்சம் கொடுக்காம எப்படி வேலை நடக்கும்..?” லீக்கான பகீர் ஆடியோ.. அரசு அதிகாரிக்கு உடனடி ‘செக்’ வைத்த அரசு..!! – cinefeeds
Connect with us

CRIME

“லஞ்சம் கொடுக்காம எப்படி வேலை நடக்கும்..?” லீக்கான பகீர் ஆடியோ.. அரசு அதிகாரிக்கு உடனடி ‘செக்’ வைத்த அரசு..!!

Published

on

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் ஒன்றைப் பதிவு செய்ய லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “லஞ்சம் கொடுக்காமல் அரசு அலுவலகத்தில் எப்படி வேலை நடக்கும்? அந்த அரசு அலுவலகமே லஞ்சம்தான்” என்று பேசும் அந்த ஆடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாகத் துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டது. அங்கு சார்பதிவாளராகப் பணியாற்றி வந்த மாலினி என்ற அதிகாரி, உடனடியாக தேவகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் தற்காலிக அமைதியை ஏற்படுத்தினாலும், அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புச் சோதனைகளும் கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in