“25 வருஷமா போலீஸுக்குத் தண்ணி காட்டிய கொள்ளையன்… கடைசியில் ஒரு டஜன் வாழைப்பழத்தால் மாட்டிகிட்டான்…” போலீஸின் கிடுக்கிப்பிடியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“25 வருஷமா போலீஸுக்குத் தண்ணி காட்டிய கொள்ளையன்… கடைசியில் ஒரு டஜன் வாழைப்பழத்தால் மாட்டிகிட்டான்…” போலீஸின் கிடுக்கிப்பிடியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ஷிகார்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சுமார் 25 ஆண்டுகளாகப் தலைமறைவாக இருந்த கொள்ளையன் சுரேந்திர தாக்கூரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லங்டா-தியுலியா கிராமத்தைச் சேர்ந்த மறைந்த ஹீரா தாக்குரின் மகனான இவன் மீது, கடந்த 2006-ஆம் ஆண்டு பல்தர் காவல் நிலையப் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் நிரந்தர பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்கும் சிறப்பு வேட்டையின் போது, ரகசியத் தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சமுவா சௌக் பகுதியில் வைத்து இவனைப் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவன் வீதியோரம் வாழைப்பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையின் விசாரணையில், 2006 கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு போலீசிடமிருந்து தப்பிப்பதற்காக அவன் நேபாளத்திற்கு ஓடிச் சென்றது தெரியவந்தது. அங்குத் தன் அடையாளத்தை மறைப்பதற்காகச் சாது உருவத்திற்கு மாறி, பல்வேறு இடங்களில் தங்கிப் போலீசாரின் கண்ணில் படாமல் வாழ்ந்து வந்துள்ளான். மேலும், தான் 2001-ஆம் ஆண்டு முதலே கொள்ளையர்களுடன் தொடர்பில் இருந்து பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக அவனாகவே ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவனது இந்த வாக்குமூலங்கள் மற்றும் பழைய குற்றப் பின்னணிகள் குறித்துப் போலீசார் தொடர்ந்து விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement

கைது நடவடிக்கைக்குப் பிறகு, அவனிடம் விசாரணையை முடித்த ஷிகார்பூர் காவல்துறையினர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். மேலும், இவன் மீது வேறு ஏதேனும் காவல் நிலையங்களிலோ அல்லது மாவட்டங்களிலோ குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் கால் நூற்றாண்டாகத் தலைமறைவாக நேபாளத்தில் சாது வேடத்தில் வாழ்ந்து வந்து, இறுதியில் பெத்தியா பகுதி சமுவா சௌக்கில் வைத்துப் பிடிபட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in