“அய்யோ.. நான் கூடவே போயிருந்தா காப்பாத்திருப்பேன்..!” 22 கி.மீ ஸ்கூட்டரில் பின்தொடர்ந்த காதலன்.. காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அய்யோ.. நான் கூடவே போயிருந்தா காப்பாத்திருப்பேன்..!” 22 கி.மீ ஸ்கூட்டரில் பின்தொடர்ந்த காதலன்.. காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

டெல்லி காஷ்மீரி கேட் பகுதியில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் உரை பகுதிக்கு நோக்கிச் சென்ற ஏசி ஸ்லீப்பர் பேருந்து, யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலான கோர விபத்தில் ஸ்ருதி ராவத் என்ற பெண் உட்பட மொத்தம் 9 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தனர். ஸ்ருதிக்கு வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவரது பாதுகாப்பு குறித்துப் பயந்த நிச்சயதார்த்தக் காதலனும் டெல்லி ஐஐடி சூப்பர் கம்ப்யூட்டர் பொறியாளருமான மோஹித் சர்மா, அந்தப் பேருந்தைத் தனது ஸ்கூட்டரிலேயே சுமார் 22 கி.மீ தூரம் வரை பின்தொடர்ந்து சென்றுள்ளார்,. வழியெங்கும் தொலைபேசியில் பேசியபடியே பின்தொடர்ந்த மோஹித்தை, ஸ்ருதி வற்புறுத்தி வீட்டிற்குத் திருப்பி அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு, இரவு 10:19 மணியளவில் மோஹிட்டை மீண்டும் தொடர்புகொண்ட ஸ்ருதி, இறுதியாக ‘குட் நைட்’ கூறிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்ததும் அழைப்பதாகக் கூறியுள்ளார்; ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவே இருவருக்குமான கடைசி உரையாடலாக மாறியுள்ளது. மறுநாள் காலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்துச் செய்தியைக் கேட்டு நிலைகுலைந்து போன மோஹித், நொய்டா செக்டார் 94-ல் உள்ள பிரேதப் பரிசோதனை நிலையத்திற்கு விரைந்து வந்து ஸ்ருதியின் சடலத்தைக் கண்டு கதறி அழுதார். “நானும் அவளுடன் அந்தப் பேருந்திலேயே சென்றிருந்தால் என் காதலியை எவ்வாறாவது காப்பாற்றியிருப்பேன்” என்று அவர் கண்ணீருடன் கூறிய நெஞ்சை உலுக்கும் காட்சிகள் அப்பகுதியில் இருந்தவர்களைக் கண் கலங்க வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in